தமிழில் பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தின் மூலமாக அறிமுகமானவர் கயல் ஆனந்தி. தொடர்ந்து பரியேறும் பெருமாள், த்ரிஷா இல்லைனா நயன்தாரா உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழில் பிரபலமான இவர் சில நாட்களுக்கு முன்னதாக உதவி இயக்குனராக பணி புரிந்து வரும் சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.
7 மாதம் கர்ப்பிணியாக இருக்கிறார். தமிழியில் நல்ல நல்ல படங்களில் நடித்து பாராட்டு பெற்றாலும் அவ்வளவாக வாய்ப்புகள் வராததால் தெலுங்கு பக்கம் கனத்தை சாய்த்துவிட்டார். ஆம், தற்போது ஸ்ரீதேவி சென்டர் என்ற படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அதில் தமிழை விட ரொமான்ஸில் தாராளம் காட்டியிருப்பதாக கோலிவுட் சினிமாக்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ட்ரைலர் தற்போது 3 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.