Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை கயல் ஆனந்திக்கு மாப்பிள்ளை இவரா? – சைலண்டா முடிந்த கல்யாணம்!

Advertiesment
நடிகை கயல் ஆனந்திக்கு மாப்பிள்ளை இவரா? – சைலண்டா முடிந்த கல்யாணம்!
, வெள்ளி, 8 ஜனவரி 2021 (11:21 IST)
தமிழில் கயல் படத்தின் மூலம் அறிமுகமான ஆனந்திக்கு நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.

தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கயல் படம் மூலமாக அறிமுகமானவர் ஆனந்தி. கயல் படம் மூலமாக அறிமுகம் ஆனதால் கயல் ஆனந்தி என்றே அழைக்கப்பட்டு வந்த இவர் தமிழில் பரியேறும் பெருமாள், த்ரிஷா இல்லைனா நயன்தாரா உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.

தற்போது ’அலாவுதீன் அற்புத கேமரா”, ”ஏஞ்சல்” உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ஆனந்திக்கும், சேலத்தை சேர்ந்த திரைப்பட இணை இயக்குனர் சாக்ரடீஸ் என்பவருடன் திருமணமாகியுள்ளது. இவர்களது திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட நிலையில் பெரிய ஆடம்பரம் இன்றி கொரோனா காரணமாக முக்கியமான சிலரை கொண்டு எளிமையான முறையில் நடத்தப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த ட்ரெண்ட்டிங் பாடலுக்கு ரெடி – தனுஷுடன் கைகோர்த்த புட்டபொம்மா நடன இயக்குனர்!