Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கும் கே பாலச்சந்தர் பட நிறுவனம்!

மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கும் கே பாலச்சந்தர் பட நிறுவனம்!
, வெள்ளி, 21 ஜூலை 2023 (07:27 IST)
பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் ஒரு காலத்தில் பிஸியான தயாரிப்பு நிறுவனமாக இருந்தது. ரஜினியை வைத்து பல படங்களை தயாரித்தது. கடைசியாக ரஜினி நடித்த குசேலன் படம் கூட அந்நிறுவனத்தின் தயாரிப்புதான். ஆனால் அதன் பின் ஏனோ சினிமா தயாரிப்பைக் கைவிட்டது. இடையில் பாலச்சந்தரும் மரணமடைய, இப்போது அந்த நிறுவனம் தூசு தட்டப்பட்டுள்ளது.

அந்த நிறுவனம் மீண்டும் படத்தயாரிப்பில் இறங்க உள்ளது. ஜி வி பிரகாஷ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தை தயாரிப்பதன் மூலம் ரி எண்ட்ரி கொடுக்க உள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் உதய் என்பவர் இயக்க உள்ளார்.

முன்னதாக கவிதாலயா பிலிம்ஸ் அமேசான் ப்ரைம் நிறுவனத்துக்காக வெப் சீரிஸ் ஒன்றை தயாரித்தது. டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள டைம் என்ன பாஸ் என்ற சீரிஸில் பரத், ப்ரியா பவானி சங்கர் மற்றும் கருணாகரன் ஆகியோர் நடித்தனர். ஆனால் அந்த சீரிஸ் இன்னும் ரிலீஸாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’புரொஜக்ட் கே’ படத்தின் டைட்டில் ‘கல்கி 2898AD’: கிளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ்..!