Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கவின் - நயன்தாரா படப்பிடிப்பு தொடக்கம்.. ரொமான்ஸ் ஸ்டில் வெளியாகி வைரல்..!

கவின்  - நயன்தாரா படப்பிடிப்பு தொடக்கம்.. ரொமான்ஸ் ஸ்டில் வெளியாகி வைரல்..!

Siva

, திங்கள், 22 ஜூலை 2024 (20:49 IST)
நடிகர் கவின் மற்றும் நடிகை நயன்தாரா ஆகிய இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கின்றனர் என்றும் இந்த படத்தை விஷ்ணு எடாவன் இயக்க இருப்பதாகவும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில் நயன்தாரா தனது சமூக வலைதளத்தில் சூப்பர் ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த ஸ்டில் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகர் கவின் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஒரு இளைஞர் தனது தன்னைவிட வயது அதிகமான பெண்ணை காதலிக்கும் போது ஏற்படும் பிரச்சனை என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை என்று கூறப்பட்டது.

விஜய்யின் ’லியோ’ உள்பட சில படங்களுக்கு பாடல் எழுதியவரும் லோகேஷ் கனகராஜின் உதவியாளராக இருந்தவருமான விஷ்ணு எடாவன் தான் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதை அடுத்து சூப்பர் ஸ்டில் ஒன்றை நயன்தாரா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று நள்ளிரவு ’சூர்யா 44’ அப்டேட்.. கார்த்திக் சுப்புராஜ் அதிரடி அறிவிப்பு..!