வெள்ளிக் கிழமை காலேஜ் போங்க… லீவ் நாள்ல வந்து படம் பாருங்க- நடிகர் கவின் பேச்சு!

vinoth
வெள்ளி, 21 நவம்பர் 2025 (08:24 IST)
கவின் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘மாஸ்க்’ படத்தை விகர்ணன் அசோக் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். ஆண்ட்ரியாவும் அவரின் மேலாளர் எஸ் பி சொக்கலிங்கமும் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கிறார்கள். வெற்றிமாறன் இந்த படத்தின் படைப்பு ஆலோசகராகவும் வழங்குபவராகவும் செயல்படுகிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் நவம்பர் 21 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்த படத்துக்காக நடிகர் கவின் தமிழ்நாடு முழுக்க சென்று ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அப்படி ஒரு கல்லூரியில் நடந்த விளம்பர நிகழ்ச்சியில் கவின் பேசியது கவனம் ஈர்த்துள்ளது. அதில் “என் படம் வெள்ளிக் கிழமை ரிலீஸாகிறது. அன்னைக்கு எல்லாரும் பொறுப்பா காலேஜ் வந்துடணும். விடுமுறை நாள்ல போய் படம் பாருங்க. ஒன்னும் பிரச்சனை இல்ல.

சினிமா ஒரு எண்டர்டெயின்மெண்ட்தான். அதுல எப்ப enter ஆகணும் எப்ப exit ஆகணும்னு தெரிஞ்சிருக்கணும். எண்டர்டெயின்மெண்ட் எண்டர்டெயின்மெண்ட்டா இருக்குற வர பிரச்சனை இல்ல” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு பற்றிய திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகும் சுப வீரபாண்டியன்…!

இன்னும் என்னை கொலவெறி பாடல் விடவில்லை… துபாய் நிகழ்ச்சியில் தனுஷ் பேச்சு!

சமந்தா இல்லாத 'தி ஃபேமிலி மேன் 3' எப்படி இருக்கிறது? விமர்சனம் இதோ..!

கருப்புப் படத்துக்கு முன்பே ரிலீஸாகிறதா சூர்யா 46?

வெள்ளிக் கிழமை காலேஜ் போங்க… லீவ் நாள்ல வந்து படம் பாருங்க- நடிகர் கவின் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments