தொடங்கியது கவினின் ‘மாஸ்க்’ பட வியாபாரம்… டிஜிட்டல் உரிமத்தைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

vinoth
செவ்வாய், 21 அக்டோபர் 2025 (08:31 IST)
சிவகார்த்திகேயன் பாணியில் சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்து ஆரம்பநிலை வெற்றியை பெற்றுள்ளார் கவின். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் கவின் கவனிக்கப்படும் ஒரு நடிகராகியுள்ளார். இப்போது அவர் நான்குக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்கிறார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஸ்டார், பிளடி பெக்கர் மற்றும் கிஸ் ஆகிய திரைப்படங்கள் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் இப்போது கவின் ‘மாஸ்க்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் விகர்ணன் அசோக் இயக்க ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வெற்றிமாறன் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் படைப்பு ஆலோசகராகவும் செயல்படுகிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் முதல் தனிப்பாடல் ரிலீஸாகி கவனம் பெற்றது. அதையடுத்து தற்போது வியாபாரம் தொடங்கியுள்ள நிலையில் டிஜிட்டல் (ஓடிடி+சேட்டிலைட்) உரிமத்தை ஜி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. நவம்பர் அல்லது டிசம்பரில் இந்த படம் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தொடங்கியது கவினின் ‘மாஸ்க்’ பட வியாபாரம்… டிஜிட்டல் உரிமத்தைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

மகுடம் படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வசூலில் பட்டையக் கிளப்பும் ‘ட்யூட்’… மூன்று நாளில் 66 கோடி ரூபாய்!

இரண்டாவது சிம்ஃபொனியை எழுதவுள்ளேன்… தீபாவளி நாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இசைஞானி!

தியேட்டர்ல்ல ஒரு ஹிட் கொடுக்க தெரியல, என்ன கிண்டல் பண்ண வந்துட்டாங்க.. சூர்யா ரசிகர்களை பொளந்த மோகன் ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments