நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் கவின் நடிக்கும் ‘கிஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth
வியாழன், 21 ஆகஸ்ட் 2025 (07:39 IST)
சிவகார்த்தியேன் போல சின்னத்திரையில் இருந்து வந்து சினிமாவில் மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறார் கவின். லிப்ட், டாடா மற்றும் ஸ்டார் ஆகிய படங்களின் மூலம் நம்பிக்கைக்குரிய இளம் நடிகராக உருவானார். இதையடுத்து அவர் நடித்த பிளடி பெக்கர் என்ற படம் ரிலீஸாகி படுதோல்வி அடைந்தது. தற்போது அவர் நடிப்பில் ‘கிஸ்’ மற்றும் ‘மாஸ்க்’ ஆகிய படங்கள் உருவாக்கத்தில் உள்ளன.

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் ’கிஸ்’ கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். ஜென் மார்டின் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படம் நீண்ட காலமாக உருவாக்கத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதே தேதியில் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் ‘தண்டகாரன்யம்” படமும் ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செலக்‌ஷன்ல மன்னன்பா! அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மை டியர் சிஸ்டர்’ பட புரோமோ

கருப்பு நிற உடையில் கலக்கல் போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!

தங்க நிற உடையில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் க்ளிக்ஸ்!

லெஜண்ட் சரவணனின் இரண்டாவது பட ரிலீஸ் அப்டேட்!

ஒல்லியாக இருப்பதற்கு ஊசிகளைப் பயன்படுத்துகிறேனா?... தமன்னா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments