முழுமதுமாகக் குணமடைந்த மம்மூட்டி.. மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார்!

vinoth
வியாழன், 21 ஆகஸ்ட் 2025 (07:31 IST)
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் மம்மூட்டி. 350க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். சமீபகாலமாக அவர் கமர்ஷியல் மற்றும் கதையம்சமுள்ள பரிச்சாட்தமான படங்கள் என மாறி மாறி நடித்துக் கவனம் ஈர்த்து வருகிறார். 73 வயதாகும் அவர் தற்போதும் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் அவருக்குப் பெருங்குடலில் புற்றுநோய் வந்திருப்பதாக தகவல் பரவியது. அதை மம்மூட்டி தரப்பில் யாரும் உறுதிபடுத்தவில்லை என்றாலும் மம்மூட்டிக்கு உடல்நலம் சரியில்லை என்றும் ஆனால் அவர் விரைவிலேயே குணமாகிவிடுவார் என்றும் சக நடிகர்கள் தெரிவித்து வந்தனர்.

இதனால் கடந்த நான்கு மாதங்களாக சினிமாவில் இருந்து விலகியிருந்த மம்மூட்டி தற்போது முழுமையாக குணமாகிவிட்டதாகவும் மீண்டும் நடிக்கத் தொடங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்யும் விதமாக மம்மூட்டியின் சக நடிகராக மோகன்லால் அவரை வரவேற்கும் விதமாக அவருக்கு முத்தமிட்டபடி இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

25 நாட்களில் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய்.. ‘பைசன்’ அசத்தல் வசூல்!

’பேட் கேர்ள்’ படம் சிரிக்கவும் அழவும் வைத்தது… பிரபல நடிகை பாராட்டு!

அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப் போகும் வெங்கட்பிரபு படம் –சிவகார்த்திகேயன்தான் காரணமா?

DC படத்துக்காக இத்தனைக் கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாரா லோகேஷ்?

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்தை நிராகரித்தாரா துல்கர் சல்மான்? – காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments