அனிருத்தால் தாமதம் ஆகும் கவினின் ‘கிஸ்’ திரைப்பட ஷூட்டிங்!

vinoth
புதன், 14 ஆகஸ்ட் 2024 (09:25 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்தவர் சீரியல் நடிகர் கவின். அதன் பின்னர் பெரியத்திரையில் கவனம் செலுத்திய அவர் லிப்ட் மற்றும் டாடா உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். இதையடுத்து அவர் கவனிக்கப்படும் நடிகராக மாறியுள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஸ்டார் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

கவின், இப்போது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் விருப்ப நடிகர்களில் ஒருவராகியுள்ளார். இந்நிலையில் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் கிஸ் என்ற படத்தில் கவின் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதற்குக் காரணம் படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தானாம். இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் படமாகப்பட வேண்டியுள்ளதாம். ஆனால் அந்த பாடலை அனிருத் இன்னும் கொடுக்கவில்லையாம். தற்போது அவர் அமெரிக்காவுக்கு இசைக் கச்சேரிக்கு சென்றுள்ளதால் அங்கிருந்து திரும்பிய பின்னர்தான் அந்த ட்யூன் கொடுத்து அதன் பின்னர் அவர்கள் படமாக்க வேண்டுமாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments