சிவகார்த்திகேயன் ரூட்டை பிடிக்கும் கவின்?... அடுத்த லெவலுக்கு செல்ல இதுதான் வழி!

Webdunia
புதன், 22 மார்ச் 2023 (14:34 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்தவர் சீரியல் நடிகர் கவின். அதன் பின்னர் பெரியத்திரையில் கவனம் செலுத்திய அவர் லிப்ட் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். அதையடுத்து சமீபத்தில் அவர் நடித்துள்ள டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. படத்தில் சில பிரச்சனைகள் மற்றும் உணர்வு சுரண்டல் காட்சிகள் இருந்தாலும், ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதிலும் நகர்ப்புறங்களில் மல்டிப்ளக்ஸ் ரசிகர்களை இந்த படம் வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இதையடுத்து அவர் நயன்தாரா தயாரிக்கும் படத்திலும், மற்றொரு படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். கிடைத்த வெற்றியைப் பயன்படுத்திக் கொள்ள ஆசைப்படும் கவின், தன்னை தேடி வரும் இயக்குனர்களிடம் படத்தில் முன்னணி நடிகைகளைக் கதாநாயகிகளாக போடும் படி கேட்டுவருவதாக சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் போது எப்படி ஹன்சிகா, நயன்தாரா என அப்போதைய முன்னணி நடிகைகளை தன்னுடைய படத்தில் நடிக்க வைத்தாரோ அந்த ரூட்டை கவினும் பின்பற்றுவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments