கவினின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth
வெள்ளி, 24 அக்டோபர் 2025 (15:07 IST)
சிவகார்த்திகேயன் பாணியில் சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்து ஆரம்பநிலை வெற்றியை பெற்றுள்ளார் கவின். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் கவின் கவனிக்கப்படும் ஒரு நடிகராகியுள்ளார். இப்போது அவர் நான்குக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்கிறார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஸ்டார், பிளடி பெக்கர் மற்றும் கிஸ் ஆகிய திரைப்படங்கள் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் இப்போது கவின் ‘மாஸ்க்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் விகர்ணன் அசோக் இயக்க ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வெற்றிமாறன் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் படைப்பு ஆலோசகராகவும் செயல்படுகிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் முதல் தனிப்பாடல் ரிலீஸாகி கவனம் பெற்றது. அதையடுத்து தற்போது வியாபாரம் தொடங்கியுள்ள நிலையில் டிஜிட்டல் (ஓடிடி+சேட்டிலைட்) உரிமத்தை ஜி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் நவம்பர் 21 ஆம் தேதி ‘மாஸ்க்’ திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாதம்பட்டி ரங்கராஜ் மாதம் 6.5 லட்ச ரூபாய்த் தர உத்தரவிடவேண்டும்… நீதிமன்றத்தில் ஜாய் கிறிசில்டா கோரிக்கை!

சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கிறேனா?... மாளவிகா மோகனன் பதில்!

காட்சிகளில் திருப்தி அடையாத யாஷ்… ரி ஷூட்… ரிலீஸ் தேதி மீண்டும் தாமதம்?

லோகேஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் கதாநாயகி இவர்தான்..!

சிவகார்த்திகேயன் வெங்கட்பிரபு படத்தில் இணைந்த சென்சேஷனல் நடிகை!

அடுத்த கட்டுரையில்
Show comments