Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளன் இயக்கத்தில் கவின் நடிக்கும் புதிய படம்.. கைவிடப்பட்ட கதை மீண்டும் தொடக்கம்?

இளன் இயக்கத்தில் கவின் நடிக்கும் புதிய படம்.. கைவிடப்பட்ட கதை மீண்டும் தொடக்கம்?
, புதன், 3 மே 2023 (08:10 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண், ரைசா நடித்த காதல் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தை யுவன் தயாரிக்க புதுமுக இயக்குனர் இளன் இயக்கி இருந்தார். இந்நிலையில் இப்போது மீண்டும் யுவன் , ஹரிஷ் கல்யாண் மற்றும் இளன் கூட்டணியில் புதிய ஸ்டார் என்ற படம் அறிவிக்கப்பட்டு அதன் சில போஸ்டர்களும் வெளியாகின.       

ஆனால் படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவில்லை. இந்நிலையில் அந்த படம் கைவிடப்பட்டுள்ளதாகவும், இப்போது இயக்குனர் இளன் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது. ஆனால் அவர்களுக்கு கதையில் திருப்தி இல்லாததால் தயங்கியுள்ளனர். ஆனால் கதையில் முழு நம்பிக்கை வைத்த தனுஷ் அதே கதையை பைனான்சியரும் தயாரிப்பாளருமான மதுரை அன்பு செழியனிடம் சொல்லி அவரை தயாரிக்கும் படி சொல்லி சம்மதம் வாங்கியுள்ளாராம். ஆனால் அந்த படமும் அடுத்த கட்டம் நோக்கி நகரவில்லை.

இந்நிலையில் இப்போது கைவிடப்பட்ட ஸ்டார் படத்தை டாடா புகழ் கவின் நடிப்பில் மீண்டும் தொடங்குகிறாராம் இளன். இந்த படத்தை நித்தம் ஒரு வானம் படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

100 ஆண்டுகள் பழைய ரயில்நிலையத்தில் இந்தியன் 2 ஷூட்டிங்!