Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு வருடத்துக்குப் பின் மீண்டும் கிளம்பிய புர்கா சர்ச்சை – பதிலளித்த ஏ ஆர் ரஹ்மான் மகள் !

Advertiesment
ஒரு வருடத்துக்குப் பின் மீண்டும் கிளம்பிய புர்கா சர்ச்சை – பதிலளித்த ஏ ஆர் ரஹ்மான் மகள் !
, திங்கள், 17 பிப்ரவரி 2020 (07:59 IST)
ரஹ்மான் தன் மகள் கதீஜாவுடன்

ஏ ஆர் ரஹ்மானின் மூத்த மகளான கதீஜா ரஹ்மானின் புர்ஹா விஷயம் இப்போது மீண்டும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

கடந்த ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் 10 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஏ ஆர் ரஹ்மான் தன் மகள் கதீஜாவோடு கலந்துகொண்டார். அப்போது கதீஜா உடலை முழுவதுமாக மறைக்கும் வண்ணம் உடுத்தியிருந்த புர்கா ஆடை சர்ச்சைகளை உருவாக்கியது. அப்போதே அதற்கு பதிலளித்த கதிஜா ‘இது நான் தேர்ந்துகொண்ட பாதை… இதற்கும் எனது தந்தைக்கும் சம்மந்தம் இல்லை’ எனத் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் ஒரு வருடத்துக்கு இப்போது மீண்டும் புர்கா சர்ச்சையை கிளப்பியுள்ளார் எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் அவரது டிவிட்டரில் ‘எனக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் படைப்புகள் பிடிக்கும். ஆனால், அவரது அன்பான மகளைப் பார்க்கையில் ஒருவித புழுக்கம் ஏற்படுகிறது. படித்தவர்களாக இருக்கும் பெண்கள் கூட, எளிதாக மூளைச்சலவை செய்யப்பட்டுவிடுவதைப் பார்க்கும்போது மிகுந்த மனவேதனையாக இருக்கிறது”  எனக் கூறி இருந்தார்.

இதற்குப் பதிலளித்த கதிஜா ரஹ்மான் ‘ஒருவருடம்தான் ஆகிறது. அதற்குள் மீண்டும் இந்த விஷ்யம் பேசுபொருளாகி உள்ளது. தஸ்லிமா நஸ்ரின், என் உடையால் நீங்கள் புழுக்கம் அடைந்ததற்காக என்னை மன்னித்துவிடுங்கள். வெளியே சென்று நல்ல காற்றை சுவாசியுங்கள். ஒரு பெண்ணஇ இழுத்து அவரின் அப்பாவுக்கு பிரச்சினை கொடுப்பது பெண்ணுரிமை இல்லை. அதேப்போல நான் எனது புகைப்படத்தை உங்களுக்கு அனுப்பி கருத்து கேட்கவில்லையே’ என கடுமையாக பதிலளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்புவுக்கு நன்றி – குட்டி ஸ்டோரி பாடலாசியர் நெகிழ்ச்சி !