டைட்டானிக் திரைப்படத்தின் மூலம் உலகப்புகழ் பெற்ற நடிகை கேட் வின்ஸ்லெட், இயக்குநராக அறிமுகமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற டைட்டானிக் திரைப்படம் வசூலில் சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, இந்தப் படத்தில் நாயகியின் நடிப்பு உலகம் முழுவதும் பாராட்டைப் பெற்றது. மேலும், அவர் "உலகின் மிகப்பெரிய பேரழகி" என்று வர்ணிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான இந்தப் படம், இன்று வரை மிகப்பெரிய வசூல் பெற்ற படங்களில் ஒன்றாக உள்ளது. டைட்டானிக் படத்திற்குப் பிறகு, சில படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் கேன்ஸ் வின்ஸ்லெட் நடித்திருந்தாலும், அந்த அளவிலான வெற்றியை எந்தப் படமும் அவருக்கு பெற்றுத்தரவில்லை.
இந்த நிலையில், "குட்பை ஜூன்" என்ற திரைப்படத்தை கேட் வின்ஸ்லெட் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படத்தை அவரே தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இங்கிலாந்தில் நடைபெறும் ஜனரஞ்சகமான காதல் கதையம்சம் கொண்ட இந்த படம், நேரடியாக நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.