நம்மூரில் மழை காலம் என்பது வெறும் இரண்டு மாதம் தான், எனவே மழையை ரசியுங்கள் என சீரியல் நடிகை ஷர்மிளா என்பவர் தனது பதில் சமூக வலைதளத்தில் பதிவு செய்த நிலையில் அதற்கு நடிகை கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார். சீரியல் நடிகை ஷர்மிலாவின் பதிவும் அதற்கு பதிலடி கொடுத்த கஸ்தூரியின் பதிவும் இதோ:
நடிகை ஷர்மிளா:
மழையை பற்றி ஓவரா பேசிப் பேசி ஒரு பீதியை கிளப்ப முயற்சி பண்றாங்களோன்னு தோணுது… முன் எச்சரிக்கையுடன் இருங்க.. பாதுகாப்பா செயல்படுங்க… ஆனா மழையை ரசிக்க மறந்துடாதீங்க… நமக்கு வருஷத்துல ரெண்டு மாசம் தான் இந்த வாய்ப்பு கிடைக்கும. ஏதோ சொல்லணும்னு தோணிச்சு… சொன்னேன்
நடிகை கஸ்தூரி:
ரோம் நகரம் எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். இந்தம்மா மழைய ரசிக்க சொல்லுது. எங்க வீட்லல்லாம் முட்டி வரை சாக்கடை தண்ணி முட்டி நிக்குது. பழைய பில்டிங். மழைய ரசிக்க முடியல . உங்க மாடி வீட்டுல இருக்கவச்சு சூடா டீ சம்சா குடுத்தீங்கன்னா நாங்களும் ரசிப்போம்.