இளம் இசையமைப்பாளர்கள் இசையில் கவனம் செலுத்துவதில்லை.. தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா ஆவேசம்!

vinoth
செவ்வாய், 27 மே 2025 (10:00 IST)
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர்களில் ஒருவர் கஸ்தூரி ராஜா. இவர் ராஜ்கிரண் நடிப்பில் உருவான ‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் எட்டுப்பட்டி ராசா உள்ளிட்ட வெற்றிப்படங்களைக் கொடுத்தார்.

இவர் இயக்குனராக மட்டும் இல்லாமல் பாடல் ஆசிரியராகவும் தன்னுடையப் படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் எழுதிய ‘எட்டுப்பட்டி ராசா’ மற்றும் “ஒத்த ரூபாயும் தரேன்” உள்ளிட்ட பாடல்கள் ஹிட்டாகின. சமீபத்தில் இவர் எழுதிய ‘ஒத்த ரூபாயும் தரேன்’ பாடல் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்படுத்தப்பட்டது. அது சம்மந்தமாக தன்னிடம் அனுமதிக் கேட்கவில்லை என அதிருப்தியைத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் இளம் இசையமைப்பாளர்கள் இசையில் கவனம் செலுத்துவதில்லை என குற்றம்சாட்டியுள்ளார். அதில் “இப்போதுள்ள இசையமைப்பாளர்களால் இளையராஜா மற்றும் தேவா போல இசையமைக்க முடியாததால் இயக்குனர்கள் பழையப் பாடல்களைப் பயன்படுத்துகிறார்கள். அப்படிப் பயன்படுத்தும்போது அனுமதிக் கேட்டுப் பயன்படுத்தலாம். இசையமைப்பாளர்கள் இசையில் கவனம் செலுத்துவதில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய், அஜித் பற்றிய கேள்விக்கு சினேகா கொடுத்த பதில்.. பிரசன்னாவின் ரியாக்‌ஷன்

‘ஜனநாயகன்’னு பேர் வச்சு கடைசில இததான் சொல்ல வர்றாங்களா? சம்பந்தமே இல்லையே

‘வா வாத்தியார்’ படத்திற்கு மீண்டும் சிக்கல்.. மீண்டும் ரிலீஸ் ஒத்திவைப்பா?

பூஜை போட்ட ஒருசில நாட்களில் சூர்யா படத்தை வாங்கிய ஓடிடி நிறுவனம்.. எத்தனை கோடி?

'ஹார்ட் பீட்' தொடரில் நடித்த நடிகருக்கு திருமணம்! ரசிகர்கள் வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments