Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதையின் தலைநகராக காசிதான் இருக்கிறது-பிரபல இயக்குநர்

Webdunia
திங்கள், 17 ஜூலை 2023 (17:18 IST)
போதை ஒழிப்பை வலியுறுத்தி போதையற்ற தமிழ்நாடு - 1 கோடி கையெழுத்து இயக்கம் என  மேற்கொண்ட முன்னெடுப்பின் நிறைவு விழா சென்னை லயோலா கல்லூரியில்  நேற்று  நடைபெற்றது.

இதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொல்.திருமாவளவன், ராஜூ முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய திருமா, தமிழ்நாடு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் போதை இல்லாத நாடாக மாற வேண்டும். மாநில அரசு, மத்திய அரசும், போதை பொருள் தடுப்பு சட்டத்தை இயற்றினாலும், போதைப்பொருள் புழக்கத்தில் இருப்பதை தடுக்க முடியவில்லை என்று கூறினார்.

இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற  இயக்குநர் ராஜூ முருகன்,’’ போதை ஒழிக்கச் சட்டம் போட்டு தடுக்கும் கூட்டமும் , மற்றொரு புறம் திட்டம் போட்டு திருடும் கூட்டமும் இருக்கிறது. ஆனால், இங்கே சட்டம் போடும் கூட்டமும் திருடும் கூட்டமும்  ஒன்றுதான்.

மது ஆலைகள் நடத்துபவர்கள் போதை மாஃபியாக்கள் பின்னாடி இருப்பவர்கள் எல்லாம் ஆட்சியாளர்கள்தான்.  போதையின் தலைநகராக காசிதான் இருக்கிறது…அது பிரதமருக்கு தெரியவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜேசன் சஞ்சய் & சந்தீப் கிஷன் இணையும் படத்தின் ரிலீஸ் திட்டம் என்ன?... வெளியான தகவல்!

‘தக் லைஃப் ஓடிடி ரிலீஸ்.. பரிசோதனை அல்ல நடைமுறை’ – கமல்ஹாசன் பகிர்ந்த தகவல்!

வாடிவாசலுக்குப் பிறகு தனுஷுடன் படம்… உறுதி செய்த வெற்றிமாறன்!

சிவகார்த்திகேயன் பற்றி எழுந்த ட்ரோல்கள்… லப்பர் பந்து இயக்குனரின் ஆதரவுப் பதிவு!

விக்ரம்மின் அடுத்த படத்தில் மீனாட்சி சௌத்ரி?.. லேடட்ஸ்ட் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments