Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காசேதான் கடவுளடா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

kasethan kadavulada
, புதன், 30 நவம்பர் 2022 (18:51 IST)
காசேதான் கடவுளடா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஜெயங்கொண்டான் உள்பட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவான திரைப்படம் காசேதான் கடவுளடா 
 
கடந்த 1972 ஆம் ஆண்டு வெளியான காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக் படமான இந்த படம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சிவா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு ஊர்வசி, ஷிவாங்கி, புகழ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜ் பிரதாப் இசையில் பிரசன்னா குமார் ஒளிப்பதிவில், நாதன் சூர்யா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
 
50 ஆண்டுகளுக்கு முன் வெளியான கருப்பு வெள்ளைப் படமான காசேதான் கடவுளடா என்ற திரைப்படம் தற்போது ஒரு சில மாற்றங்கள் செய்து காமெடி கலந்த படமாக உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’டிமாண்டி காலனி 2’ படத்தின் இயக்குனர் திடீர் மாற்றம்: யார் தெரியுமா?