நடிகர் தனுஷை கருணாஸ் தன் மகனோடு திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் ராஷி கண்ணா ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். ஏற்கனவே சென்னையிலும் பாண்டிச்சேரியிலும் இரண்டு கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இப்போது புதுக்கோட்டையில் நடந்து வருகிறது.
இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் கருணாஸ் தன் மகன் கென் கருணாஸோடு சேர்ந்து தனுஷை சந்தித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனத்தை பெற்றுள்ளது. இதனால் திருச்சிற்றம்பலம் படத்தில் கென் நடிக்கிறாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.