இணையத்தை கலக்கும் கார்த்தியின் ‘கைதி’ டிரைலர்

திங்கள், 7 அக்டோபர் 2019 (20:36 IST)
விஜய்யின் ‘பிகில்’ திரைப்படம் வெளியாகும் தினத்தில் கார்த்தி நடித்த ‘கைதி’ திரைப்படம் வெளியாகவிருக்கும் நிலையில் ‘கைதி’ திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

படம் முழுவதும் அதிரடி ஆக்சன், லாரி சேஸிங், தப்பித்து ஓடும் கைதி, போலீஸ்காரர்களுக்கும் குடும்பம் பாசம் இருக்கும் உண்மை, என படம் முழுவதும் உணர்ச்சிகள் மிகுந்த ஆக்சன் படமாக இருக்கும் என்பது டிரைலரில் இருந்தே தெரிகிறது

சாகிறதா இருந்தாலும் சண்டபோட்டுட்டு சாகணும்’, ‘பத்து வருசம் உள்ளே இருந்தது மட்டும்தான் உங்களுக்கு தெரியும், உள்ளே போறதுக்கு முன்னாடி என்ன பண்ணிகிட்டு இருந்தேன்னு உங்களுக்கு தெரியாதுல்ல’ என்ற கார்த்தியின் வசனம் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைக்கின்றது

ஒரு ஆக்சன் படத்திற்கு ஏற்ற சாம் சிஎஸ் பின்னணி,  சத்யன் சூரியனின் இருட்டிலும் தெளிவான ஒளிப்பதிவு, லோகேஷ் கனகராஜின் கச்சிதமான திரைக்கதை ஆகியவை இந்த படத்தை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது

மொத்தத்தில் காதல், செண்டிமெண்ட், டூயட், காமெடி இல்லாத ஒரு முழுநீள ஆக்சன் படம் வரும் தீபாவளியில் கார்த்தி ரசிகர்களுக்கு காத்திருக்கின்றது என்பது மட்டும் உண்மை என இந்த டிரைலரில் இருந்து தெரிய வருகிறது

Here we go, the official trailer of #Kaithi ! We set out to do an edgy film and feels we’ve come close to our vision! Hope you guys like it!#KaithiTrailer - https://t.co/9SrD3Ay8FQ@Dir_Lokesh @itsNarain @sathyaDP @SamCSmusic @DreamWarriorpic#KaithiDiwali

— Actor Karthi (@Karthi_Offl) October 7, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ‘பிகில்’ டீசரெல்லாம் கிடையாது, ஸ்ட்ரெய்ட்டா டிரைலர்: ரிலீஸ் தேதி அறிவிப்பு