Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்த படத்தில் ஜோடியில்லாமல் நடிக்கும் கார்த்தி?

karthy
, வெள்ளி, 17 நவம்பர் 2023 (19:21 IST)
கார்த்தியின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியில்லை என தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் கார்த்தி.  இவரது 25 ஆவது படம் ஜப்பான். இந்த படத்தை இயக்குனர் ராஜுமுருகன் இயக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்க எஸ்ஆர் பிரபு தயாரித்து வருகிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்திருந்தார்.
 
இந்நிலையில் ஜப்பான் படத்துக்கு சென்சார் போர்டு UA சான்றிதழ் வழங்கிய  நிலையில், இப்படம்   இன்று உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது.
 
தீபாவளியையொட்டி   இப்படம் ரிலீஸானதால் கார்த்தி  ரசிகர்கள் மகிழ்ச்சி யடைந்து இப்படத்தைக் கொண்டாடினர்.

இந்த நிலையில், கார்த்தியின் அடுத்த படத்தை சூதுகவ்வும் பட இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கவுள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

அதேபோல் கார்த்தியின் 27 படத்தை  96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கவுள்ளார். 2டி எண்டர்டெயிண்ட்மென்ட் தயாரிக்கவுள்ள  இப்படத்தில் ஹீரோயின் இல்லை எனவும் அவர் வித்தியாசமான கதையைத் தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. நாளை ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்..!