Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

படம் தொடங்குவதற்கு முன்பே தயாரிப்பாளரோடு முட்டிக்கொண்ட விஷால் பட இயக்குனர்!

படம் தொடங்குவதற்கு முன்பே தயாரிப்பாளரோடு முட்டிக்கொண்ட விஷால் பட இயக்குனர்!
, செவ்வாய், 7 மார்ச் 2023 (09:36 IST)
அடங்கமறு படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் கார்த்திக் தங்கவேல். அந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து அவரிடம் பல கதாநாயகர்கள் கதைக் கேட்டனர். ஆனால் யாரும் ஓகே செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அந்த பட்டியலில் சூர்யா, கார்த்தி மற்றும் விஷால் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஆனால் எதுவும் நடக்காத நிலையில் தற்போது பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் ஆர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்கும் வேலையில் ஈடுபட்டார். ஆனால் இப்போது ஆர்யா அந்த படத்தில் இருந்து விலகிவிடவே, மீண்டும் விஷால் உடனே அவர் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்போது மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வரும் விஷால் அடுத்து துப்பறிவாளன் 2 படத்தை தொடங்க உள்ளார். இதற்கிடையில் கார்த்திக் தங்கவேல் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளாராம். இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் தற்போது தொடங்கி நடந்து வருகிறதாம்.

இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் கதிரேசனுக்கும், இயக்குனர் கார்த்திக்கும் இடையில் ஒளிப்பதிவாளரை ஒப்பந்தம் செய்வது சம்மந்தமாக கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பஞ்சாயத்து இப்போது ஹீரோவான விஷாலிடம் சென்றுள்ளதாகவும், அவர் இயக்குனருக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலியானாவுக்கு இங்கு இடம் இல்லை - ரெட் கார்டு போட்ட கோலிவுட்?