Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெட்ரோ படத்தின் முக்கிய அப்டேட்டைக் கொடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்!

vinoth
சனி, 8 பிப்ரவரி 2025 (14:55 IST)
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ எனும் திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா - சூர்யா ஆகியோருடன் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. படம் மே 1 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை டி சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments