Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு வழியாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட கார்த்திக் நரேனின் ‘நிறங்கள் மூன்று’ படம்!

Advertiesment
ஒரு வழியாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட கார்த்திக் நரேனின் ‘நிறங்கள் மூன்று’ படம்!

vinoth

, சனி, 2 நவம்பர் 2024 (07:51 IST)
கார்த்திக் நரேன் தன்னுடைய முதல் படமான ‘துருவங்கள் பதினாறு’ படம் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான’மாறன்’ கடந்த மார்ச் 11 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸானது. வெளியான உடனே மோசமான விமர்சனங்களை சந்தித்தது. அதிகளவு சமூகவலைதளங்கள் ட்ரோல் ஆனது. சமீபகாலத்தில் இந்தளவு ட்ரோல்களை சந்தித்த படம் எதுவும் இல்லை என்ற அளவுக்கு ஆனது.

இந்நிலையில் மாறன் படத்துக்குப் பிறகு மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் இயக்குனர் கார்த்திக் நரேன் தற்போது அதர்வா, சரத்குமார் மற்றும் ரஹ்மான் ஆகியோரை வைத்து ‘நிறங்கள் மூன்று’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.  இந்த படத்தின் ஷூட்டிங் முன்பே முடிந்துவிட்டாலும் படத்துக்கு எதிர்பார்ப்பு இல்லாத காரணத்தால் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்படாமல் இருந்தது.

அதற்குக் காரணம் இயக்குனர் கார்த்திக் நரேனின் சமீபத்தைய படங்கள் தோல்வி அடைந்ததும், அதர்வா கடைசியாக ஒரு ஹிட் கொடுத்து பல ஆண்டுகள் ஆனதும் காரணமாக அமைந்தது. இந்நிலையில் இப்போது நிறங்கள் மூன்று திரைப்படம் நவம்பர் 22 ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல் நாளில் மிகப்பெரிய வசூலை செய்த சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம்!