Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நானியின் படத்தில் இணைந்த கார்த்தி… அடுத்த பாகத்தில் அவர்தான் ஹீரோவா?

vinoth
வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (09:22 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அறியப்படும் நடிகராக இருப்பவர் நானி. தெலுங்கு சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம்தான் அதிகம். ஆனாலும் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் தானாக முன்னேறி வந்து கலக்கி வருகிறார் நானி. அவர் நடிக்கும் படங்கள் அடுத்தடுத்து ஹிட்டடித்து வருகின்றன.

நானி நடித்துள்ள ஹிட் படத்தின் மூன்றாம் பாகம் மே 1 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி கவனம் ஈர்த்துள்ளன. இதையடுத்து கார்த்தி, இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாராம். இதன் மூலம் அடுத்த பாகத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஏனென்றால் ஹிட் பட வரிசையில் அடுத்த பாகத்தின் ஹீரோவை க்ளைமேக்ஸ் காட்சியில் அறிமுகப்படுத்துவார்கள். இரண்டாம் பாகத்தில் நானியை அறிமுகப்படுத்தி இருந்த நிலையில் தற்போது மூன்றாம் பாகத்தில் அவர் ஹீரோவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாமளே ஒரு AI தான்.. நமக்கெதுக்கு இன்னொரு AI – இளையராஜா கருத்து!

மைல்கல் வசூலை எட்டிய விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’!

50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் 'ஃபயர்'

ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட் பீட்’ 2ஆம் சீசன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

அடுத்த கட்டுரையில்
Show comments