பொன்னியின் செல்வனில் தான் நடிக்க ஆசைப்பட்ட பாத்திரத்தில் நடித்த கார்த்திக்கு ரஜினியின் பாராட்டு வார்த்தைகள்!

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2022 (08:42 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க எம்ஜி ஆர் மற்றும் கமல் முயன்று அது நிறைவடையாத நிலையில் இயக்குனர் மணிரத்னம் தற்போது சாத்தியமாக்கியுள்ளார். அவரும் ஏற்கனவே ஒருமுறை தொடங்கி ஆனால் அதை முடிக்காமல் கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது இரண்டு பாகங்களாக உருவாகி முதல் பாகம் கடந்த வாரம் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மனாக நடித்துள்ள ஜெயம் ரவியைப் பாராட்டியுள்ளார்.

அதே போல பொன்னியின் செல்வன் நாவலில் தான் நடிக்க ஆசைப்பட்ட வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் தற்போது நடித்துள்ள கார்த்தியையும் அவர் பாராட்டியுள்ளார். இது சம்மந்தமாக கார்த்தி பகிர்ந்துள்ள பதிவில் “ ரஜினி சார் எங்கள் அழைப்பு மிகவும் ஸ்பெஷலானது. மற்றவர்களின் வேலையைப் பாராட்ட நீங்கள் எடுத்துக்கொள்ளும் முனைப்புகள் எப்போதும் ஆச்சர்யமானவை. நன்றி சார். நிறைய அன்பும் மரியாதையும்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலகிருஷ்ணாவின் அடுத்த படத்தின் நாயகி நயன்தாரா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மூன்றாவது திருமணமும் முறிவு: 'சிங்கிள்' என அறிவித்த பிரபல நடிகை..!

இவர் கேட்டதுக்கு சுத்த விட்டு அடிச்சுருப்பாரு.. இளையராஜாவுக்கும் பாரதிகண்ணனுக்கும் இடையே நடந்த சண்டை

தனுஷ் படத்தில் நடிக்க அட்ஜெஸ்ட்மெண்ட்!. நடிகை மான்யா ஆனந்த் பகீர்!..

தங்க நிற உடையில் ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்!

அடுத்த கட்டுரையில்
Show comments