Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது குழந்தைக்கு பெயர் வைத்த நடிகர் கார்த்தி!

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (18:37 IST)
நடிகர் கார்த்தி அவர்களுக்கு ஏற்கனவே உமையாள் என்ற பெண் குழந்தை இருந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் தனது இரண்டாவது குழந்தையின் பெயரை தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார் 
 
நடிகர் கார்த்தி, ரஞ்சனி என்ற பெண்ணை கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு உமையாள் என்ற பெண் குழந்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கார்த்திக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை ஒன்று பிறந்தது என டுவிட்டரில் மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருந்தார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது
 
இந்த நிலையில் தற்போது தனது இரண்டாவது குழந்தைக்கு கந்தன் என்று பெயர் வைத்திருப்பதாக டுவிட்டரில் கார்த்தி டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
 
கண்ணா, 
அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக "கந்தன்" என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும். 
அன்புடன்... 
அப்பா.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் விளம்பரம் செய்தது கேமிங் செயலிகளுக்கு மட்டுமே.. அமலாக்கத்துறை விசாரணைக்கு பின் விஜய் தேவரகொண்டா பேட்டி..

கருநிற உடையில் கண்குளிர் போட்டோஷூட்டை நடத்திய திவ்யபாரதி!

கிளாமர் உடையில் மலைபிரதேசத்தில் ஹூமா குரேஷியின் ஜாலி மோட் போட்டோஷூட்!

அடுத்த மைல்கல்… வசூலில் உச்சத்தைத் தொட்ட விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’!

கமல்ஹாசனுக்காக எழுதிய கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்த சல்மான் கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments