Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்தியின் சர்தார் பட உரிமையைக் கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி!

Webdunia
புதன், 25 மே 2022 (09:32 IST)
கார்த்தி நடிப்பில் அடுத்தடுத்து விருமன் மற்றும் சர்தார் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸாக உள்ளன.

தமிழ் சினிமாவில் இரும்புத்திரை, ஹீரோ போன்ற கவனிக்கத்தக்க படங்களை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன். தற்போது இவர் இயக்கத்தில் கார்த்தி நடித்து சர்தார் என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றது. நாளை கார்த்தி பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் சர்ப்ரைஸ் அறிவிப்பாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சர்தார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

மேலும் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை முன்னணி நிறுவனமான கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. முன்னதாக ஆஹா ஓடிடி இந்த படத்தை வாங்கி ரிலீஸூக்குப் பின் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments