Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னடத்தில் வெளியாகும் கார்த்தியின் ‘சர்தார்’… ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (09:26 IST)
கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது.

தமிழ் சினிமாவில் இரும்புத்திரை, ஹீரோ போன்ற கவனிக்கத்தக்க படங்களை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன். தற்போது இவர் இயக்கத்தில் கார்த்தி நடித்து சர்தார் என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றது. நாளை கார்த்தி பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் சர்ப்ரைஸ் அறிவிப்பாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சர்தார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

மேலும் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை முன்னணி நிறுவனமான கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. முன்னதாக ஆஹா ஓடிடி இந்த படத்தை வாங்கி ரிலீஸூக்குப் பின் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சர்தார் படத்தின் தெலுங்கு டப்பிங் ரிலீஸ் உரிமையை பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் ‘அன்னபூர்ணா ஸ்டுடியோஸ்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதுபற்றி நடிகர் கார்த்தி நாகார்ஜுனாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இருவரும் இணைந்து நடித்த தோழா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இப்போது கர்நாடகா ரிலீஸ் உரிமையை AV consultancy media எனும் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

விண்வெளிக்கு செல்லும் அல்லு அர்ஜுன்? தமிழில் ஒரு Interstellar? அட்லீ செய்யப்போகும் மேஜிக்!?

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments