கார்த்தி பி எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இரும்புத்திரை, ஹீரோ போன்ற கவனிக்கத்தக்க படங்களை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன். தற்போது இவர் இயக்கத்தில் கார்த்தி நடித்து சர்தார் என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றது. நாளை கார்த்தி பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் சர்ப்ரைஸ் அறிவிப்பாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சர்தார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
இந்நிலையில் படத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்துள்ள நிலையில் தற்போது படத்தின் பட்ஜெட் போட்டதை விட 11 கோடி ரூபாய்க்கு மேல் அதிகமாக செலவு வைத்துள்ளாராம் இயக்குனர் மித்ரன். இது தயாரிப்பு தரப்பினருக்கு அவர் மேல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம். ஏற்கனவே மித்ரன் இயக்கிய ஹீரோ திரைப்படத்திலும் இதுபோல பட்ஜெட்டை மீறி செலவு செய்ததாக குற்றச்சாட்டு அவர் மேல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.