Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கார்த்தி படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய ஆஹா தமிழ்!

Advertiesment
கார்த்தி படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய ஆஹா தமிழ்!
, திங்கள், 14 பிப்ரவரி 2022 (09:57 IST)
கார்த்தி நடித்துள்ள சர்தார் படத்தின் ஓடிடி உரிமையை ஆஹா தமிழ் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

கொரோனா காலகட்டத்தில் தமிழ் சினிமாவை பெருமளவுக் காப்பாற்றியது ஓடிடி நிறுவனங்கள்தான். இப்போது ஓடிடி உரிமை படத்தின் வியாபாரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது. இந்தியாவில் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற உலகளாவிய ஓடிடி நிறுவனங்கள் பெரும் மார்க்கெட்டை வைத்திருந்தாலும், சோனி லிவ், ஜி 5 போன்ற இந்திய அளவிலான ஓடிடி நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க அளவு வாடிக்கையாளர்களை வைத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தென்னிந்திய சினிமாக்களை இலக்காக கொண்டு நடிகர் அல்லு அர்ஜுனின் குடும்பம் தொடங்கிய ஓடிடி நிறுவனம்தான் ஆஹா. இப்போது ஆஹா தமிழ் என்ற பெயரில் தமிழ் சினிமாவிலும் கால்பதிக்கிறது. முதல் படமாக ரைட்டர் படத்தின் ஓடிடி உரிமையை பெற்று ரிலிஸ் செய்தது. இதையடுத்து இப்போது கார்த்தி நடிப்பில் உருவாகி சர்தார் படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றியுள்ளது. சர்தார் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகான் படத்தில் வாணி போஜன் காட்சிகள் நீக்கப்பட்டது ஏன்? கார்த்திக் சுப்பராஜ் அளித்த விளக்கம்!