ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (16:06 IST)
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் தொடங்க உள்ளது.

குக்கூ, ஜோக்கர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன், தோழா, மெஹந்தி சர்க்கஸ் ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். தற்போது இவர், நடிகர் ஜீவாவை வைத்து இயக்கியுள்ள ஜிப்ஸி திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இப்போது இவர் தனது பாதையை மாற்றிக்கொண்டு முழுக்க முழுக்க கமர்ஷியலாக ஒரு படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க கார்த்தி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகளுக்காக ராஜு முருகன் இப்போது கேரளாவி முகாமிட்டுள்ளாராம். இந்த திரைப்படம் கார்த்தியின் 25 ஆவது படமாக அமைவதால் கூடுதல் அக்கறையோடு படக்குழுவினர் உழைக்கிறார்களாம். இந்த படத்துக்கு ஜப்பான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்துக்காக கார்த்தி மீசையை எல்லாம் எடுத்து ஸ்டைலிஷான லுக்குக்கு மாறியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் பொன்னியின் செல்வன் ரிலீஸூக்கு பிறகு அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

3000 கோடி ரூபாய் சொத்தை வேண்டாம் என சொன்ன ஜேசி சான்… ஜாக்கி சான் பெருமிதம்!

திரையரங்கில் எடுபடாத ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நான் ஏன் காப்புரிமைக் கேட்பதில்லை… இசையமைப்பாளர் தேவா சொன்ன ‘குட்டி ஸ்டோரி’

விமர்சனங்கள்தான் என்னைக் கடுமையாக உழைக்க வைக்கின்றன… சாய் அப்யங்கர் பாசிட்டிவ் பேச்சு!

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் லிஸ்ட்டில் இணைந்த ஆர் ஜே பாலாஜி!

அடுத்த கட்டுரையில்
Show comments