Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பையா 2 படத்தில் நடந்த அதிரடி மாற்றம்… ஆர்யாவுக்குப் பதில் உள்ளே வந்த நடிகர்?

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2023 (09:04 IST)
லிங்குசாமி இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பையா. கார்த்தியின் சினிமா கேரியரில் இன்றளவும் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது இந்த படம். இந்நிலையில் இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. படத்தில் ஹீரோவாக கார்த்திக்கு பதில் ஆர்யா நடிப்பார் என சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது இந்த படத்தில் ஒரு அதிரடி மாற்றம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் லிங்குசாமி நடிகர் கார்த்தியை சந்தித்து பையா 2 கதையை விவரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கதையைக் கேட்டு பிடித்துப் போன கார்த்தி, தானே படத்தில் நடிக்க ஆசைப்படுவதாகக் கூறியதாக சொல்லப்படுகிறது.

அதனால் இப்போது ஆர்யாவுக்கு பதில் கார்த்தியே பையா 2 படத்தில் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தை கார்த்தியின் ஆஸ்தான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

வேற வழியே இல்ல!? குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திடீர்னு வர இதுதான் காரணமாம்?

எஸ்கே கிட்ட சொல்லி சொல்லி எனக்கு அலுத்துபோயிட்டு! மேடையிலேயே போட்டுடைத்த வடிவுகரசி! எழுந்து வந்த எஸ்.கே!

"திரைவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்!

சோறு போட்டவங்களுக்கு விசுவாசமாக இருக்க மட்டும் தான் தெரியும் இந்த நாய்க்கு: சூரியின் ‘கருடன்’ டிரைலர்..!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்- சினிமா சங்க விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

அடுத்த கட்டுரையில்
Show comments