Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்தியின் ஜப்பான் படத்துக்காக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட கிராமம்!

Webdunia
திங்கள், 19 ஜூன் 2023 (07:31 IST)
கார்த்தி நடிப்பில் அடுத்து ரிலீஸ் ஆகவிருக்கும் படமாக உருவாகி வருகிறது ஜப்பான். இது கார்த்தியின் 25 ஆவது படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் ராஜுமுருகன் இயக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்க எஸ்ஆர் பிரபு தயாரித்து வருகிறார். இந்த படத்துக்கு ஜப்பான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் நான்கு மொழிகளில் தீபாவளிப் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் முக்கியக் காட்சிக்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்டமாக ஒரு கிராமத்தையே செட்டாக உருவாக்கி படப்பிடிப்பை நடத்தியுள்ளனர் படக்குழுவினர்.

இங்கு இப்போது முக்கியக் காட்சிகளை படமாக்கி வரும் நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் மொத்த ஷூட்டிங்கும் முடிய உள்ளதாம். அதன் பின்னர் வேறு லொகேஷனில் இரண்டு பாடல்களை மட்டும் படமாக்க உள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரே வாரத்தில் ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூல்.. ’கோட்’ வசூலை முறியடிக்குமா தேவாரா?

பிக்பாஸ் சம்யுக்தா போலீஸ் அதிகாரியாக நடிக்கும் "மெட்ராஸ் மாஃபியா கம்பெனி"

ஆலியா பட் மற்றும் ஷர்வரி இணைந்து நடித்துள்ள 'ஆல்பா' திரைப்படம்!!

"அப்பு VI STD" திரை விமர்சனம்!

ரசிகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் நன்றி சொன்ன ரஜினிகாந்த்: வைரல் பதிவுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments