ராமாயணத்தில் ஏன் மாற்றம் செய்யவேண்டும்… ஹாலிவுட் கார்ட்டூன் போல உள்ளது – ஆதிபுருஷ் குறித்து பிரபல நடிகர் விமர்சனம்!

Webdunia
திங்கள், 19 ஜூன் 2023 (07:16 IST)
பலத்த எதிர்பார்ப்புகளும், அதே நேரத்தில் கேலிகளை எதிர்கொண்டும் ரிலீஸ் ஆனது ஆதிபுருஷ் திரைப்படம். வெளியானது முதல் நெகட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வட இந்தியாவிலும் பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இல்லை என சொல்லப்படுகிறது.

ஆனாலும் படம் இரண்டு நாட்களில் 240 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளதன் உண்மைத் தன்மை தெரியவில்லை. இந்நிலையில் இந்த படத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார் ராமாயண தொடரில் ராமராக நடித்ததன் மூலம் கவனம் பெற்ற நடிகர் அருண் கோவில்.

ஆதிபுருஷ் பற்றி பேசியுள்ள அவர் “இத்தனை ஆண்டுகளாக நாம் பார்த்து கேட்டு அனுபவித்த ராமாயணத்தில் என்ன தவறு இருந்தது. ஏன் விஷயங்களை மாற்ற வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டது? ராமர் மற்றும் சீதை மேல் நம்பிக்கை இல்லையா? ராமாயணம் என்ற நம்பிக்கை சார்ந்த விஷயத்தில் எதையும் மாற்றி சிதைக்கக் கூடாது. அதை ஹாலிவுட்டில் இருந்த தழுவப்பட்ட ஒரு கார்ட்டூன் போல காட்டுவது சரியானதல்ல” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

அடுத்த கட்டுரையில்
Show comments