Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அண்ணனுக்கு வில்லனாகும் தம்பி!!

Advertiesment
நடிகர் கார்த்தி
, திங்கள், 3 ஏப்ரல் 2017 (12:51 IST)
இயக்குனர் மணிரத்னம் இயக்கி நடிகர் கார்த்தி, புதுமுக நடிகை அதிதி ராவ் ஆகியோர் நடித்துள்ள காற்று வெளியிடை வருகிற 7 ஆம் தேதி வெளியாகிறது. 


 
 
இந்நிலையில் படத்தை பிரபலபடுத்த கார்த்தி மற்றும் படக்குழுவினர் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். அப்போது கார்த்தி இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த போது நிறைய திட்டு வாங்குவேன், இப்போது நடிகர் என்பதால் இயக்குனர் என்னை திட்டுவது இல்லை. எனவே, நடிகராக இருக்கவே விரும்புகிறேன் என கூறினார்.
 
மேலும், நல்ல கதை இருந்தால் அண்ணன் சூர்யாவுக்கு வில்லனாக மாறவும் தயார் என தெரிவித்தார். அதோடு படத்தை இயக்கும் எண்ணம் இருப்பதாகவும், நேரம் வரும் போது இயக்குனராக மாறுவேன் என்றும் தெரிவித்துள்ளார் கார்த்தி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்போ விஜய் 61 பட தலைப்பு இது இல்லையா!