Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘மாநகரம்’ இயக்குனரின் படத்தில் கார்த்தி?

‘மாநகரம்’ இயக்குனரின் படத்தில் கார்த்தி?
, புதன், 28 நவம்பர் 2018 (16:12 IST)
கடந்த வருடம் (2017) மார்ச் மாதம் வெளியான படம் ‘மாநகரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தில், சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா, சார்லி ஆகியோர் நடித்தனர். ஜாவித் ரியாஸ் இசையமைத்தார். எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இருவரும் இந்தப் படத்தைத் தயாரித்தனர்.
 
ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதற்கு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த வருடம் வெளியான தமிழ்ப் படங்களில், முக்கியமான படமாகவும் அமைந்தது.
 
‘மாநகரம்’ படத்தைத் தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது படத்தின் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தையும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இருவரும் தயாரிக்கின்றனர். 
 
இந்நிலையில், இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதாவது,  "திரைக்கதையை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். 'மாநகரம்' படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களே இதிலும் பணிபுரியவுள்ளார்கள். ஆனால், இதில் கார்த்தி நடிப்பது இன்னும் முடிவாகவில்லை. முழுமையாக திரைக்கதை முடிவானவுடன் தயாரிப்பு நிறுவனம் தான் முடிவு செய்யும்" என்று தெரிவித்தார்கள்.
 
'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தைத் தொடர்ந்து பிரபுதேவா இயக்கத்தில் 'கறுப்பு ராஜா வெள்ளை ராஜா' மற்றும் பாண்டிராஜ் இயக்கும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தவுள்ளார் கார்த்தி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புற்றுநோயில் இருந்து தப்பிய நடிகை ரம்யா ! - அஞ்சலி போஸ்டருக்கு உருக்கமான பதில்!