Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கார்த்தியின் அடுத்த பட டைட்டில்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

japan
, செவ்வாய், 8 நவம்பர் 2022 (12:24 IST)
கார்த்தியின் அடுத்த பட டைட்டில்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி நடித்த சர்தார் திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 100 கோடி வசூல் செய்தது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் கார்த்தி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தை இயக்குனர் ராஜுமுருகன் இயக்க இருப்பதாகவும் ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் எஸ்ஆர் பிரபு தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
‘ஜப்பான்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பூஜை குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக அனு இமானுவேல் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் இந்த பூஜையில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய மூன்று தொடர் வெற்றிகளை பெற்ற கார்த்தி இந்த படத்தையும் வெற்றிப் படமாக கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்லயே Bar வச்சிருக்கும் ஜனனி ஐயர் - குடிச்சுட்டு ஒரு கூத்து - வீடியோ!