Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் கார்த்தி- பா ரஞ்சித் கூட்டணி!

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2023 (07:17 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் 'தங்கலான்’ என்ற திரைப்படத்தில் விக்ரம், பாரவ்தி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்குப் பிறகு பா ரஞ்சித் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் ஏற்கனவே இணைந்த மெட்ராஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாகவும், விமர்சன ரீதியாக பாரடடுகளைக் குவித்த படமாக இன்றும் கொண்டாடப்படுகிறது.

10 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இணையும் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், இந்த படம் அடுத்த ஆண்டு தொடங்கும் எனவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இலங்கையில் ‘பராசக்தி’ படப்பிடிப்பு.. கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை சந்தித்த ரவிமோகன்..!

கடலோர பகுதி மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்: ரஜினிகாந்த் வீடியோ

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments