கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் ஜோதிகா – ஜீது ஜோசப்பின் அடுத்த த்ரில்லர் !

Webdunia
வியாழன், 7 மார்ச் 2019 (09:18 IST)
கார்த்தியும் ஜோதிகாவும் அடுத்ததாக ஒரு த்ரில்லர் படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கார்த்தி நடிப்பில் கடந்த மாதம் பிப்ரவரி 14 ஆம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவான தேவ் படம் படுதோல்வி அடைந்துள்ளது. அதனையடுத்து அடுத்தடுத்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க கார்த்தி ஒப்பந்தம் ஆகி வருகிறார். தற்போது அவர் மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒருப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கதாநாயகியே கிடையாது. இப்படத்தின் 80 விழுக்காடு படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்தப் படத்திற்கு இப்போது ‘கைதி’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் ரெமோ இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. இந்த படத்தை முடித்தவுடன் அடுத்து கார்த்தி பாபநாசம் புகழ் ஜீது ஜோசப் இயக்கத்தில் ஒரு த்ரில்லர் படத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்க சம்மதித்திருக்கிறார்.

இருவரும் தற்போது வேறு படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டு மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா, தமன்னா பெயரில் போலி வாக்காளர் பட்டியல்: ஹைதராபாத்தில் பரபரப்பு - காவல்துறை வழக்குப்பதிவு

ஹீரோக்களுக்காகதான் கதை… ஹீரோயின்களுக்கு கவர்ச்சி மட்டும்தான்… ராதிகா ஆப்தே ஆதங்கம்!

நாகார்ஜுனாவின் நூறாவது படத்தில் இந்த ஹீரோயினும் இருக்கிறாரா?

அந்த நடிகர்தான் என் ஃபேவரைட்… அவருடன் இணைந்து நடிக்கவேண்டும்- ருக்மிணி வசந்த் ஆசை!

பிரியங்கா மோகன் நடிக்கும் ‘Made in Korea’... கதைக்களம் பற்றி வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments