Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முரட்டு சிங்கிள்கள் கவனத்துக்கு... ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம் என்ன தெரியுமா?

முரட்டு சிங்கிள்கள் கவனத்துக்கு... ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம் என்ன தெரியுமா?
, செவ்வாய், 5 மார்ச் 2019 (16:07 IST)
முரட்டு சிங்கங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக புதிய படம் ஒன்று கோலிவுட்டில் வரப்போகிறது. முரட்டு சிங்கிள்களை பார்ப்பதற்காகவே அந்த மாதிரி கதையில் தேடி தேடும் நடிக்கும் ஜிவி பிரகாஷ்தான் இந்த படத்திலும் ஹீரோவாக நடிக்க உள்ளார். 
பியார் பிரேம காதல் படத்தில் படுகவர்ச்சியாக நடித்து முரட்டு சிங்கிள்களை ஈர்த்த பிக்பாஸ் ரைசா இப்படத்தில் ஜீவி பிரகாஷ் ராஜுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இவ்வளவு தூரம் சொல்லிவிட்டு படத்தின் டைட்டிலை சொல்லாமல் இருந்தால் எப்படி... 'காதலிக்க யாருமில்லை’ இதுதான் ஜிவி பிரகாஷின் புதிய பட டைட்டில்.  
 
கமல் பிரகாஷ் இயக்குகிறார். காவியா மகேஷ் தயாரிக்கிறார். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். வழக்கம்போல் ஜிவி பிரகாஷ் தான் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். முரட்டு சிங்கிள் களின் கவனத்திற்காக இப்படத்தை எடுப்பதாக பட போஸ்டரிலேயே அவர்கள் அறிவித்துள்ளார்கள். இதனால் இப்படத்தில் நிச்சயம் பல விஷயங்கள் இருக்கும் என நம்பலாம். 
 
ஜிவி பிரகாஷ் நடிப்பில் குப்பத்து ராஜா மற்றும் வாட்ச்மேன் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. வரும் மாதத்தில் இந்த இரண்டு படங்களும் வெளியாகும் என தெரிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விமானநிலையத்தில் பிரபாஸை கன்னத்தில் அறைந்த ரசிகை.! வைரலாகும் வீடியோ.!