Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாணாக்காரன் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் இரண்டு பாகங்களாக உருவாகிறதா?

vinoth
திங்கள், 15 ஜூலை 2024 (17:07 IST)
வெற்றிமாறனின் உதவி இயக்குனரும் அசுரன் மற்றும் விடுதலை ஆகிய படங்களின் மூலம் நடிகராகவும் அறியப்பட்டவர் தமிழ். அவர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘டாணாக்காரன்’ திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் கடந்த 2021 ஆம் ஆண்டு ரிலீஸாகி வெற்றிப் படமாக அமைந்தது.

இந்த படம் வெளியாகி இரண்டு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இயக்குனர் தமிழ் இன்னும் தன்னுடைய அடுத்த படத்தை ஆரம்பிக்கவில்லை. பல படங்களில் நடிகராக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது அடுத்த படத்தில் கார்த்தியை இயக்கவுள்ளார். இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்த படத்துக்காக ராமநாதபுரத்தை களமாகக் கொண்டு ஒரு பீரியட் கதையை தமிழ் எழுதியுள்ளார். கார்த்தி, சர்தார் 2 படத்தை முடித்துவிட்டு இந்த படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தின் ஷூட்டிங் நவம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பராசக்தி’ சிக்கலில் சிக்கியது தனுஷூக்கு மகிழ்ச்சியா? கோலிவுட்டில் பரபரப்பு..!

இட்லிகடை, பராசக்தியை முடக்குகிறதா அமலாக்கத்துறை.. தலைமறைவாகிய தயாரிப்பாளர்..!

45 நாட்களில் கமல்ஹாசனின் அடுத்த படம்.. ஹீரோயின் இல்லை.. லிப்லாக் இல்லை..!

என்ன வேணும் உனக்கு.. த்ரிஷாவின் மயங்க வைக்கும் நடனத்தில் ‘தக்லைப்’ பாடல்..!

பிறருடைய படங்களை ஆராய்ச்சி செய்பவர்.. அட்லிக்கு டாக்டர் பட்டம் கொடுப்பது குறித்து கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments