Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று பூஜையோடு தொடங்கும் ‘கார்த்தி 29’ படம்!

vinoth
வியாழன், 10 ஜூலை 2025 (10:34 IST)
வெற்றிமாறனின் உதவி இயக்குனரும் அசுரன் மற்றும் விடுதலை ஆகிய படங்களின் மூலம் நடிகராகவும் அறியப்பட்டவர் தமிழ். அவர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘டாணாக்காரன்’ திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் கடந்த 2021 ஆம் ஆண்டு ரிலீஸாகி வெற்றிப் படமாக அமைந்தது.

இந்நிலையில் அவர் தனது அடுத்த படத்தில் கார்த்தியை இயக்கவுள்ளார். இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.  படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்துக்கு தற்காலிகமாக ‘கார்த்தி 29’ எனப் பெயர் வைக்கப்பட்டு போஸ்டர் ஒன்று வெளியாகியுளது. அதில் கடலில் ஒரு ராட்சச கப்பல் வருவது போல வடிவமைக்கப்பட்டு இருந்தது. படத்தில் முக்கியமானக் கதாபாத்திரங்களில் நிவின் பாலி மற்றும் ஜெயராம் ஆகியோர் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் கதைக்களம் 1960 களில் நடப்பது போல உருவாக்கப்பட்டதால் முன்தயாரிப்பு பணிகள் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் இந்த படத்தின் பூஜை நடக்கிறது. ஆடி மாதம் முடிந்ததும் ஆகஸ்ட்டில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்று பூஜையோடு தொடங்கும் ‘கார்த்தி 29’ படம்!

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் இயக்குனராகும் ரத்னகுமார்… ஹீரோவாக ‘ரெட்ரோ’ வில்லன்!

காடன் படத்தில் என் கதாபாத்திரம் துண்டிக்கப்பட்டது… பிரபு சாலமனிடம் இப்போது வரை பேசவில்லை –விஷ்ணு விஷால் ஆதங்கம்!

‘கில்’ ரீமேக்கில் துருவ் விக்ரம் இல்லையா?... இயக்குனர் அளித்த பதில்!

சினிமாவில் 7 ஆண்டுகள் புறக்கணிக்கபப்ட்டேன்… விஷ்ணு விஷால் உருக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments