Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‘கர்ணன்’ படத்தின் 3வது சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘கர்ணன்’ படத்தின் 3வது சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
, செவ்வாய், 9 மார்ச் 2021 (17:17 IST)
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’ 
 
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி இந்த படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘திரெளபதியின் முத்தம்’ என்ற பாடல் மார்ச் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் அந்த பாடலை வரவேற்க தயாராகி வருகின்றனர். ஏற்கனவே கண்டா வரச்சொல்லுங்க, பண்டாரத்தி புராணம் ஆகிய இரண்டு பாடல்கள் ரிலீசாகி ஹிட்டாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அந்த வரிசையில் மூன்றாவது பாடலும் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!