Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தலைவி படத்தில் முதலில் நடிக்க இருந்தது கங்கனா இல்லையாம்! வேறு யார் தெரியுமா?

தலைவி படத்தில் முதலில் நடிக்க இருந்தது கங்கனா இல்லையாம்! வேறு யார் தெரியுமா?
, புதன், 15 செப்டம்பர் 2021 (16:39 IST)
நடிகை கரீனா கபூர்தான் தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க முதல் தேர்வாக இருந்ததாம்.

பிரபல இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’தலைவி’. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இந்த படம் கடந்த மார்ச் மாதமே ரிலீசுக்கு தயாரானது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் இந்த படம் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை. இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி இந்தியா முழுவதும் தலைவி திரைப்படம் ரிலீஸானது.

இந்த படத்தை ஐந்து மொழிகளில் உருவாக்கி இருந்தனர். அதற்கு முக்கியக் காரணம் அனைத்து மொழிகளிலும் பிரபலமாக இருந்த கங்கனா நடித்திருந்தார். ஆனால் அவர் முதல் சாய்ஸ் இல்லையாம். அவருக்கு முன்னதாக கரீனா கபூர்தான் நடிக்க இருந்ததாம். ஆனால் அவரின் சம்பளம் ஒத்து வராததால் கங்கனா நடித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்ஸ்டாகிராமில் மெகா சாதனை படைத்த மேகா ஆகாஷ்!