Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சயிஃப் அலிக்கானை குத்தியபோது.. பார்ட்டி கொண்டாடிக் கொண்டிருந்த கரீனா கபூர்!? - போலீஸார் சந்தேகம்!

Prasanth Karthick
வியாழன், 16 ஜனவரி 2025 (14:43 IST)

பாலிவுட் நடிகர் சயிஃப் அலிக்கான் மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பத்தின் போது அவரது மனைவி கரீனா கபூர் பார்ட்டியில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 


 

பிரபல பாலிவுட் நடிகரான சயிஃப் அலிக்கானை அவரது அபார்ட்மெண்ட் வீட்டிலேயே மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சயிஃப் அலிக்கானின் வீடு அந்த அபார்ட்மெண்டின் 10வது மாடியில் உள்ளது. பல அரசு அதிகாரிகள், தொழில் நிறுவன முதலாளிகள் அந்த கட்டிடத்தில் வசிக்கின்றனர். சயிஃப் அலிக்கானை குத்திய நபர் திருடுவதற்காக அந்த கட்டிடத்தில் நுழைந்தவர் என கூறப்படுகிறது.

 

ஆனால் இவ்வளவு பிரபலங்கள் வாழும் கட்டிடத்திற்கு பாதுகாப்பு அவ்வளவு குறைவாக இருந்ததா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் திருட வந்த நபர் அத்தனை தளங்களில் திருடாமல் சரியாக சயிஃப் அலிக்கான் வசிக்கும் 10வது மாடிக்கு சென்றது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

இந்த சம்பவத்தின்போது சயிஃப் அலிக்கானின் இரண்டாவது மனைவியான நடிகை கரீனா கபூர் தனது சகோதரி வீட்டில் பார்ட்டியில் இருந்துள்ளார். அதை அவர் இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்துள்ளார். இதனால் சயிஃப் அலிக்கான் தனது வீட்டில் தனியாக இருந்திருப்பார் என்பது தெரிந்தே அவர் மீது கத்திக்குத்து சம்பவம் நடந்திருக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தன்னை விட 30 வயது இளைய நடிகையை ‘டேட்’ செய்யும் டாம் க்ரூஸ்!

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? வெளியான தகவல்!

அட்லி அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ‘ராஜமாதா’ ரம்யா கிருஷ்ணன்?

உங்க ஏசி ரூம்ல தெரு நாய்கள வெச்சிக்க வேண்டியதுதான?! - பிரபலங்களை வெளுத்த இயக்குனர் ராம் கோபால் வர்மா!

வெளிநாடுகளில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல்… கூலி திரைப்படம் பென்ச்மார்க்!

அடுத்த கட்டுரையில்
Show comments