Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானுக்கு வீடு புகுந்து கத்திக்குத்து! மருத்துவமனையில் அனுமதி!

Prasanth Karthick
வியாழன், 16 ஜனவரி 2025 (09:53 IST)

பிரபல இந்தி நடிகரான சயிஃப் அலிக்கானை மர்ம நபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சமீப காலமாக இந்தி நடிகர்களுக்கு கொலை மிரட்டல் விடப்படுவது, வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நடத்துவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சல்மான்கான் வீட்டு முன்னால் பிஷ்னோய் கேங் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தை தொடர்ந்து, தற்போது நடிகர் சயிஃப் அலிகான் மீது நடந்துள்ள கத்திக்குத்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியில் பிரபல நடிகராக இருந்து வரும் சயிஃப் அலிகான், முன்னாள் நடிகர் மன்சூர் அலிகானின் மகன். இவர் இந்தியில் ரேஸ், ஏஜெண்ட் வினோத் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர். நடிகை கரீனா கபூரை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட சயிஃப் அலிகானின் முதல் மனைவியின் மகள் சாரா அலிக்கானும் இந்தியில் இளம் நடிகையாக இருந்து வருகிறார்.

 

இந்நிலையில் மும்பையில் உள்ள சயிஃப் அலிகான் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சயிஃப் அலிக்கானை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் காயமடைந்த சயிஃப் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்தில் பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்புள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமல், அஜித், சூர்யா படங்களை வாங்கி குவித்த நெட்பிளிக்ஸ்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

கிளாமர் க்யீனாக மாறிய இந்துஜா… கலர்ஃபுல் போட்டோ ஆல்பம்!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்த வாணி போஜன்!

விடாமுயற்சி படத்தின் கதைப் பற்றி மகிழ் திருமேனி பகிர்ந்த தகவல்!

குட் பேட் அக்லி படத்தைக் கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments