'இந்தியன் 2' படத்தில் 'விவேகம்' வசனகர்த்தா?

Webdunia
வெள்ளி, 23 மார்ச் 2018 (13:42 IST)
மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் அரசியல் பணிகளுடன் சினிமா மற்றும் பிக்பாஸ் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். வரும் ஜூன் மாதம் பிக்பாஸ் 2 தொடங்கவுள்ள நிலையில் அடுத்த சில மாதங்களில் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பிலும் கமல் கலந்து கொள்ளவுள்ளார்

இந்த நிலையில் 'இந்தியன் 2' படத்தின் டெக்னீஷியன்களை தேர்வு செய்யும் பணியை ஷங்கர் தொடங்கிவிட்டார். முதல்கட்டமாக இந்த படத்தின் வசனகர்த்தாவாக அவர் கபிலன் வைரமுத்துவை தேர்வு செய்துள்ளார். இவர் ஏற்கனவே அஜித்தின் விவேகம் படத்திற்கும் விஜய்சேதுபதியின் 'கவண்' படத்திற்கும் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் 2' திரைப்படம் ஒரு அரசியல் கலந்த சமூக பிரச்சனையை அலசும் படம் என்பதால் இந்த படத்தின் வசனங்களில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் க்யூட் பிக்ஸ்…!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

அருந்ததி ரீமேக் பணிகள் தொடங்குவது எப்போது?... மோகன் ராஜா அப்டேட்!

என் மகனுக்கு நான் சொன்ன அட்வைஸ் இதுதான்… கருணாஸ் ஓபன் டாக்!

மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குனரோடு கூட்டணியா?... சூர்யா எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments