காந்தாரா திரைப்படம் இந்த ஆண்டின் மெகா பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் ரிலீஸான காந்தாரா திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று இந்தியா முழுவதும் வசூலில் கலக்கியது. ஆனால் இந்த திரைப்படத்தில் காடுகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளதாக இடதுசாரியினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.
கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ள காந்தாரா திரைப்படம், 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில்தான் உருவாக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டில் மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு அதிக லாபம் சம்பாதித்த படமாக காந்தாரா அமைந்துள்ளது எனப் பலரும் கூறிவருகின்றனர்.
ஆனால் காந்தாரா படத்தின் இயக்குனரும், கதாநாயகனுமான ரிஷப் ஷெட்டி “காந்தாரா சின்ன பட்ஜெட் படமில்லை. இதற்கு முன் நான் எடுத்த படம், காந்தாரா பட்ஜெட்டில் 10 சதவீதம் கூட இல்லை. அதனால் காந்தாரா எனக்கு பெரிய பட்ஜெட் படம்தான்” எனக் கூறியுள்ளார்.