மெஹா பட்ஜெட்.. மோசமான வசூல் – கண்ணப்பா படத்தின் முதல் வார கலெக்‌ஷன் இவ்வளவுதானா?

vinoth
திங்கள், 30 ஜூன் 2025 (14:32 IST)
பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள "கண்ணப்பா" திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி ரிலீஸானது.  இந்த படத்தில் சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், ராகுல் ராமகிருஷ்ணா, பிரம்மானந்தம், மோகன் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அதோடு மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார், காஜல் அகர்வால் மற்றும் மோகன் பாபு போன்ற முன்னணி நட்சத்திரங்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவில் செலவு செய்யப்பட்டது. படத்தின் பட்ஜெட் சுமார் 200 கோடி  ரூபாய் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் படம் வெளியாகி மிக மோசமான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இது வசூலிலும் பிரதிபலித்துள்ளது. இந்த படம் முதல் வார இறுதியில் இந்திய அளவில் சுமார் 24 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் படத்துக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments